மீண்டும் கில், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசி.,தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
மீண்டும் கில், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசி.,தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ADDED : ஜன 03, 2026 05:55 PM

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஏற்கனவே, டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி, டி20 தொடரில் இடம்பிடிக்காத கில், மீண்டும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ளார். அதேபோல, விக்கெட் கீப்பர் பன்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் அசத்திய ருதுராஜ் கெயிக்வாட், சர்பிராஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2026 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டும், 10 ஓவர்கள் வீசக்கூடிய உடல் தகுதியில்லாததாலும், ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
அணியின் விபரம்; சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 11ம் தேதி வதோதராவில் நடக்கிறது. 2வது போட்டி ராஜ்கோட்டில் ஜனவரி 14ம் தேதியும், 3வது போட்டி இந்தூரில் ஜனவரி 18ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

