விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்
விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்
UPDATED : ஜன 02, 2026 10:45 PM
ADDED : ஜன 02, 2026 06:47 PM

சென்னை: '' விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்,'' என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டம் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் முக்கிய பங்கி வகிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பட்டம் வாங்கியவர்கள் நேர்மையுடன் தேசத்திற்காக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சிறந்து விளங்க வேண்டும். பல்கலைக்கழகக் கல்விக்குப் பிறகும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2047ம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

