துபாயில் உயிரிழந்த தேஜஸ் விமானிக்கு இந்திய விமானப்படை இறுதி அஞ்சலி
துபாயில் உயிரிழந்த தேஜஸ் விமானிக்கு இந்திய விமானப்படை இறுதி அஞ்சலி
ADDED : நவ 22, 2025 10:54 PM

புதுடில்லி: விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் துயரமான மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை விமானி அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்தார் என தெரிவித்துள்ளது.
துபாய் விமானக் கண்காட்சியின் போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ், தீப் பந்தில் மோதியதில் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சியால் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துபாய் விமான கண்காட்சியில் நடந்த துரதிர்ஷ்டவசமான தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் துயரமான இழப்பிற்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. போர் விமானி அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்தார்.
அவரது கண்ணியமான ஆளுமை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் மூலம் அவருக்கு மகத்தான மரியாதையைப் பெற்றுத் தந்தது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள், சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆழ்ந்த துக்கத்தின் இந்த நேரத்தில் இந்திய விமானப்படை அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கிறது. அவரது சேவை நன்றியுடன் நினைவுகூரப்படும். இவ்வாறு இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

