தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை


UPDATED : பிப் 16, 2024 05:09 PM

ADDED : பிப் 16, 2024 01:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2024 05:09 PM ADDED : பிப் 16, 2024 01:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இந்திய அணி 445 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் கிராலியை அவுட்டாக்கியதன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1 -1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. ‛டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித், பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜடேஜா என இருவரும் சதம் விளாச, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து இருந்தது. ஜடேஜா 110, குல்தீப், ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான இன்று, ஜடேஜா 112 ரன்களுக்கும், குல்தீப் யாதவ் 4 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஆனால், துருவ் ஜூரல், அஸ்வின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். துருவ் ஜூரல் 46, அஸ்வின் 37 ரன்களுக்கு அவுட்டாக, பும்ரா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணியின் உட் 4, ஆண்டர்சன், ஹார்ட்லி, ஜோ ரூட், தலா ஒரு விக்கெட், ரேஹன் அஹமது 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியில் கிராலி, பென் டக்கெட் ஆகியோர் துவக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 89 ரன்னாக இருந்தபோது, அஸ்வின் சுழலில் கிராலி (15) கேட்சானார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 500வது விக்கெட்டாகும். அடுத்து வந்த போப் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டக்கெட் சதம் விளாசினார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டக்கெட் (133), ஜோ ரூட் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

அஸ்வின் '500'


டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை அஸ்வின் தனது 98வது டெஸ்டில் படைத்துள்ளார். இதன்மூலம் குறைந்த டெஸ்டில் 500 விக்., கைப்பற்றிய வீரர்களில் 2வது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (87) உள்ளார்.

அதேபோல், குறைந்த பந்துகளில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 25,528வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின், 25,714வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us