இந்தியாவில் மின்சாரத் தேவை 4 சதவீதம் அதிகரிக்கும்: சர்வதேச எரிசக்தி அமைப்பு கணிப்பு
இந்தியாவில் மின்சாரத் தேவை 4 சதவீதம் அதிகரிக்கும்: சர்வதேச எரிசக்தி அமைப்பு கணிப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:22 PM

புதுடில்லி: 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை 4 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐஇஏ எனப்படும் சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி அமைப்பு அறிக்கை:
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை 4 சதவீம் அதிகரிக்கும். பொருளாதார விரிவாக்கம், ஏர் கண்டிஷனிங் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் விவசாய மின் நுகர்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகளால் இந்த வளர்ச்சி உந்தப்படுகிறது. மின்சாரத் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், இந்தியா அதன் எரிசக்தி திறனை விரிவுபடுத்துவதிலும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் குளிர்ந்த கோடை வெப்பநிலை நுகர்வு குறைந்தும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, ஆண்டில் பிற்பகுதியில் இந்தியாவின் மின்சாரத் தேவை மிதமான 4 சதவீதம் அதிகரிக்கும். கடந்த ஆண்டு 6 சதவீத வளர்ச்சி இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உலகளாவிய மின்சாரத் தேவை, 2025-2026 காலகட்டத்திற்கான கணிப்பை விட மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவில் மின்சாரத் தேவை 2024 இல் காணப்பட்ட விரைவான வளர்ச்சியை விட 2025 ஆம் ஆண்டில் மிதமான வேகத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சர்வதேச எரிசக்தி அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.