sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து

/

பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து

பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து

பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து

4


ADDED : மார் 03, 2026 05:10 PM

Google News

4

ADDED : மார் 03, 2026 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான தனது அழைப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக நாங்கள் குரல் எழுப்புகிறோம். மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

ஏற்கனவே, பல உயிர்கள் துரதிர்ஷ்டவசமாக இழக்கப்பட்டுள்ளன, அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு மிகவும் முன்னுரிமை வாய்ந்தது. வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை இந்தியாவும் உறுதியாக எதிர்க்கிறது.

ஏற்கனவே, கடந்த சில நாட்களில் இதுபோன்ற தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, புனித ரமலான் மாதத்தில், பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us