'இண்டிகோ'வில் இன்ஜின் கோளாறு டில்லியில் அவசர தரையிறக்கம்
'இண்டிகோ'வில் இன்ஜின் கோளாறு டில்லியில் அவசர தரையிறக்கம்
ADDED : மார் 29, 2026 01:05 AM

புதுடில்லி: ஆந்திராவில் இருந்து 161 பயணியருடன் டில்லி சென்ற, 'இண்டிகோ' விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 161 பயணியருடன், 'இண்டிகோ' விமானம் நேற்று காலை டில்லிக்கு புறப்பட்டது. டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன், அந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, முழு அவசரநிலை நெறிமுறைகளின் கீழ் பயணியர் விமானம் தரையிறங்க, ஓடுபாதை 28ல் அனுமதி வழங்கப்பட்டது.
சி றப்பு அனுமதி வழங்கப்பட்ட ஓடுபாதையில், 'இண்டிகோ' விமானம் நேற்று காலை 10:53 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான ஓடுபாதை அருகே தீயணைப்பு வாகனங்களுடன் மீட் புப் படையினர் தயார்நி லையில் இருந்தனர். பயணியர், விமானப் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தின் ஒரு இன்ஜின் பழுதானதாகவும், அதை தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமானம் தரை யிறக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
