"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு
"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு
ADDED : ஜன 30, 2024 11:17 AM

புதுடில்லி: ''முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார்'' என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதற்கு பின் நாட்டில் தேர்தலே நடக்காது.
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார். ஜனநாயகத்தை கொன்ற அதே கட்சியின் தலைவர் இப்போது எதிர்காலத்தை கணிக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு எப்படிப்பட்ட ஜனநாயகம் வேண்டும்?. இவ்வாறு அவர் கூறினார்.