ராஷ்டிரபதி பவனில் பாலிவுட் பாடல் பாடி அசத்திய இந்தோனேசிய பிரதிநிதிகள் குழு
ராஷ்டிரபதி பவனில் பாலிவுட் பாடல் பாடி அசத்திய இந்தோனேசிய பிரதிநிதிகள் குழு
ADDED : ஜன 26, 2025 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராஷ்டிரபதி பவனில் இந்தோனேசிய பிரதிநிதிகள் குழு 'குச் குச் ஹோதா ஹை' என்ற புகழ்பெற்ற பாலிவுட் பாடலை பாடி அசத்தினர். இது சமூகவலைதளத்தில் வைரலானது.
டில்லியில் நடைபெற்ற 76வது இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் அவருடன் பிரதிநிதிகள் குழுவினரும் வந்து கலந்துகெண்டனர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக, நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நடத்திய விருந்தில் கலாசாரம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட இந்தோனேசிய பிரதிநிதிகள் குழு 'குச் குச் ஹோதா ஹை' என்ற பாலிவுட் பட பாடலைப் பாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர்கள் அந்த பாடலை பாடியது வந்திருந்த விருந்தினர்களுக்கு ஆச்சரியப்படுத்தியது. இது தற்போது சமூகவலை தளத்தில் வைரலாகிறது.

