இண்டியா கூட்டணியின் மகா., தேர்தல் வியூகம்: முதலில் சீட் ஷேரிங்: அப்புறம் முதல்வர் வேட்பாளர்
இண்டியா கூட்டணியின் மகா., தேர்தல் வியூகம்: முதலில் சீட் ஷேரிங்: அப்புறம் முதல்வர் வேட்பாளர்
ADDED : ஆக 10, 2024 09:44 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றிபெற இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா, சரத்பவாரின் ( சரத்சந்திர பவார்) கட்சி ஆகியவை சேர்ந்த மகா விகாஷ் அகாடி அணியும், பா.ஜ., ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மற்றும் அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஆகியவை சேர்ந்த மகாயுதி கூட்டணியும் மோத உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது: முதற்கட்ட சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. நாங்கள் ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.
இதனிடையே கூட்டணி சார்பில் முதல்வர் யார் என்ற கேள்விக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களிடம் கலந்தாலோசித்த பின்னர் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானாபடோலே கூறினார்.
இதனிடையே உத்தவ் தாக்கரே தலைநகர் டில்லி சென்று இண்டியா கூட்டணி தலைவர்களை சந்தித்தார். இது குறித்து பா.ஜ.,தலைவர்கள் கூறுகையில் எம்.வி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பதை உறுதி செய்துள்ளதாக கூறினர்.

