நீர் வழி ஆணையத்தில் வேலை: 37 பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு!
நீர் வழி ஆணையத்தில் வேலை: 37 பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு!
ADDED : செப் 04, 2024 11:40 AM

புதுடில்லி: இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் 37 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21.
இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (ஐ.டபிள்யு.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ்.,- 11,
துணை இயக்குநர்- 2,
உதவி ஹைட்ரோகிராபிக் சர்வேயர்- 1,
டிரைவர்- 4,
இளநிலை கணக்கு அதிகாரி- 5,
டிரெட்ஜ் கன்ட்ரோல் ஆப்பரேட்டர் - 5,
ஸ்டோர்கீப்பர்- 1,
மாஸ்டர் - 4
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 4,
கல்வி தகுதிகள் என்ன?
* துணை இயக்குநர் பணியிடங்களுக்கு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* இளநிலை கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கு காமர்ஸ் பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். கல்வித்தகுதி பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது வரம்பு
* துணை இயக்குநர், உதவி ஹைட்ரோகிராபிக் சர்வேயர் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* இளநிலை கணக்கு அதிகாரி, டிரெட்ஜ் கண்ட்ரோல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், டிரைவர், மாஸ்டர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://iwai.nic.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200.