ADDED : மார் 15, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.ஆர்., புரம்: மோசடி வழக்கில் கைதானவரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., லோக் ஆயுக்தாவிடம் சிக்கினர்.
பெங்களூரின் கே.ஆர்., புரம் போலீஸ் நிலைய போலீசார், மோசடி வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்திருந்தனர். இவரை விடுதலை செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி, இன்ஸ்பெக்டர் வஜ்ரமுனியும், எஸ்.ஐ., ரம்யாவும் கேட்டனர்.
முதற்கட்டமாக 50,000 ரூபாய் பெற்றுக்கொண்டனர். நேற்று மதியம் ஒரு லட்சம் ரூபாயை வாங்கினர். தகவலறிந்து அங்கு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் வஜ்ரமுனியையும், எஸ்.ஐ., ரம்யாவையும் கையும் களவுமாக பிடித்தனர். பணத்தை கைப்பற்றினர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

