ADDED : ஜன 11, 2024 11:43 PM
மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணையில், மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டி, நேற்று ஆய்வு செய்தது.
மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டி தலைவராக இருப்பவர் பா.ஜ., - எம்.பி., பர்பத்பாய் படேல். இந்த கமிட்டியில் 17 பேர் உறுப்பினராக உள்ளனர்.
இந்த கமிட்டியினர் நாடு முழுவதும் உள்ள, அணைகளை ஆய்வு செய்து, அதன் ஸ்திர தன்மை குறித்து, மத்திய நீர்பாசனத் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கும், மாண்டியா கே.ஆர்.எஸ்., அணையின் நிலை குறித்து, மத்திய பார்லிமென்ட் நீர்வள கமிட்டி ஆய்வு செய்யும் என்று, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்து இருந்தார்.
அதன்படி, பர்பத்பாய் படேல் மற்றும் 14 உறுப்பினர்கள், கே.ஆர்.எஸ்., அணையை ஆய்வு செய்ய, நேற்று மாண்டியா வந்தனர். அவர்களை மாண்டியா தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., புட்டராஜு வரவேற்றார்.
அணைக்கு சென்ற கமிட்டியினர், அணையை சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நீர்பாசனத்துறை அதிகாரிகளிடம் அணையின் பராமரிப்பு குறித்தும், மதகுகள் நிலை குறித்து விசாரித்து தகவல் பெற்று கொண்டனர்.