ADDED : ஜூலை 03, 2026 05:16 AM

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதிலும், கட்சித் தாவல்களை துாண்டுவதிலும், பா.ஜ., தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இது, அரசியல் அமைப்பை உடைக்கும் செயல். பா.ஜ., ஆட்சி அதிகாரத்தை இழந்து, மத்திய விசாரணை அமைப்பு எங்கள் கட்டுப்பாட்டில் வரும் நாளில், அக்கட்சி, 10 நிமிடங்களில் 10 துண்டுகளாக சிதறும்.
சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் அணி
நம்பிக்கை துரோகம்!
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை மோசடி நாட்டையே உலுக்கியுள்ளது. இது, நிதி மோசடி மட்டுமல்ல, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம். சிறப்பு விசாரணை குழு விசாரணையில் திருப்தி இல்லை. எனவே, உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நியாயமான, நேர்மையான விசாரணை தேவை.
வேணுகோபால் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
போராட்ட வீரர்கள்!
கடந்த 1947ல் பிரிவினைக்கு பின், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த மக்கள் அகதிகள் அல்ல; தாய்நாடு மீதான பற்றின் காரணமாக துயரங்களையும், வலிகளையும் தாங்கிக் கொண்ட போராட்ட வீரர்கள். அவர்கள், தங்கள் மதங்களை அச்சமின்றி பின்பற்றக்கூடிய பாரத மண்ணில் வாழ விரும்பியதே இதற்கு காரணம்.
மோகன் பாகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
