இடைக்கால பட்ஜெட்; டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்
இடைக்கால பட்ஜெட்; டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்
UPDATED : ஜன 30, 2024 05:11 PM
ADDED : ஜன 30, 2024 12:02 PM

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், தி.மு.க.,, அ.தி.மு.க, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஆறாவது மத்திய பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்குகிறது. கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், இன்று(ஜன.,30) டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், திமுக, அதிமுக, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.