ADDED : ஜூன் 14, 2025 07:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்,:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரியானா மாநிலத்தின், 22 மாவட்டங்களிலும் கோலாகலமாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
சர்வதேச யோகா தினம், ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பிரம்ம சரோவர் ஏரிக்கரையில், பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஹரியானாவின் 22 மாவட்டங்கள் மற்றும் 121 வட்டாரங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குருஷேத்ரா பிரம்மசரோவர் ஏரிக்கரையில் பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சிக்கு, யோகா குரு ராம்தேவ் தலைமை வகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை, 15.60 லட்சம் பேர் பெயரை பதிவு செய்துள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.