கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலா என விசாரணை
கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலா என விசாரணை
ADDED : மே 18, 2025 11:50 PM

பாம் ஸ்பிரிங்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மகப்பேறு மருத்துவ மையம் உள்ளது. இதன் அருகிலேயே கருத்தரித்தல் மையம் அமைந்துள்ளது. இதன் உரிமையாளராக டாக்டர் மஹத் அப்துல்லா உள்ளார்.
இந்த கருத்தரித்தல் மையத்தின் 'கார் பார்க்கிங்' பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், அங்கிருந்த நபர் ஒருவர் பலியானார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் கருத்தரித்தல் மைய அலுவலக கட்டடம் சேதமடைந்தது. அருகில் உள்ள மருந்தகம் உள்ளிட்ட கட்டடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
அதிர்ஷ்டவசமாக கருத்தரித்தல் மையத்தில் குறைந்த அளவே மக்கள் இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
குண்டுவெடிப்பு தொடர்பாக மஹத் அப்துல்லா அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., குற்றஞ்சாட்டிஉள்ளது.