ஐ.பி.எல்., பீவர் இப்போது இருந்தே ஆரம்பம்; சரியான கலவையில் உள்ளதா ஆர்.சி.பி., அணி?
ஐ.பி.எல்., பீவர் இப்போது இருந்தே ஆரம்பம்; சரியான கலவையில் உள்ளதா ஆர்.சி.பி., அணி?
ADDED : நவ 28, 2024 11:58 PM

ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு துவங்கியது. இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் களமாக ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் உள்ளன.
இந்தியா, வெளிநாட்டு வீரர்கள் ஒரே அணியில் கைகோர்த்து விளையாடுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எதிர்த்து விளையாடும் போது முறைத்துக் கொண்டவர்கள், ஒரே அணியில் நண்பர்களாக இருப்பது இன்னும் சுவாரஸ்யம்.
இந்த ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் தென் மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கர்நாடகாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளது.
ராஜாவாக வலம்
பெயருக்கு ஏற்றார் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜாவாகவே வலம் வருகிறது.
ஐந்து முறை, 'சாம்பியன் பட்டம்' வென்று அசத்தியுள்ளது. ஆனால், சென்னை அணிக்கு நேர்மாறாக பெங்களூரு அணி உள்ளது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.
இத்தனைக்கும் அந்த அணியில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரம் விராட் கோலி உள்ளார். அவர் கேப்டனாக இருந்தும் அணிக்கு ஒருபோதும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
கட்டுக்கோப்பு
ஆனாலும் பெங்களூரு அணி மீது ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல்., துவங்கும் முன்பு, 'ஈ சாலா கப் நம்தே' என்று ரசிகர்கள் கூறுவதும், அணி தோற்று கோப்பையை வெல்ல முடியாமல் போகும்போது, 'அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்' என்று சொல்வதும் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
பெங்களூரு அணியில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், எதிரணியை கட்டுப்படுத்தும் அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசும் பவுலர்கள் இல்லாததே இதுவரை கோப்பையை வெல்லாததற்கு காரணம் என்றும் அலசப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி 18வது ஐ.பி.எல்., போட்டிகள் துவங்குகின்றன. போட்டிகளை ஒட்டி அணிகள் தங்கள் அணியில் உள்ள வீரர்களை விடுவிக்கும் நடைமுறை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
புதிய வீரர்கள்
பெங்களூரு அணி விராட் கோலி, பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார், பந்துவீச்சாளர் யஷ் தயாள் ஆகியோரை மட்டும் அணியில் தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில் புதிய வீரர்களை அணிக்கு எடுத்துள்ளனர்.
பெங்களூரு அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது பலம், பலவீனம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
-- நமது நிருபர் - -