UPDATED : பிப் 16, 2025 06:12 PM
ADDED : பிப் 16, 2025 05:59 PM

மும்பை: நடப்பு ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கானபோட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. இந்த ஆண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. அணிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் கோல்கட்டா மற்றும் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. 23ம் தேதி இரு ஆட்டங்கள் நடக்கின்றன. ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் விளையாடும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
மொத்தம் லீக் சுற்றில் 74 போட்டிகள் நடக்கின்றன. மே 20 மற்றும் மே 21ம் தேதிகளில் குவாலிபயர் 1 மற்றும் வெளியேற்றுதல் சுற்று போட்டி ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது. குவாலிபயர் 2 மே 23ம் தேதியும், பைனல் மே 25ம் தேதி கோல்கட்டாவிலும் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் மொத்தம் 7 போட்டிகள் நடக்க இருக்கிறது.