sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்: வான் பரப்பை மூடியது ஈரான்

/

 அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்: வான் பரப்பை மூடியது ஈரான்

 அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்: வான் பரப்பை மூடியது ஈரான்

 அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்: வான் பரப்பை மூடியது ஈரான்

1


UPDATED : ஜன 16, 2026 01:01 AM

ADDED : ஜன 16, 2026 12:58 AM

Google News

UPDATED : ஜன 16, 2026 01:01 AM ADDED : ஜன 16, 2026 12:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தன் வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் விமான சேவைகளை மாற்றுப் பாதைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானின் அடக்குமுறை மத ஆட்சி அமைப்புக்கு எதிராக, கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவை இந்த போராட்டத்தின் துவக்கமாக இருந்தன.

தற்போது இது, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையாக மாறி உள்ளது. இணையதள சேவையை அரசு முழுமையாக துண்டித்து, போராட்டக்காரர்களை கொடூரமாக அடக்கி வருகிறது.

ஈரான் அரசின் இந்த செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்ததுடன், ஈரானுடன் நல்லுறவு வைத்துள்ள நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீதம் வரியும் விதித்தார். இது தவிர, ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, ஈரான் அரசு தன் வான்வெளியை மூட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக, நம் நாட்டில் இருந்து இயக்கப்படும் 'ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

இது தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஈரான் வான்வெளியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுப் பாதை வசதி இல்லாத இடங்களில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரான் வான் பரப்பைத் தவிர்த்து, நீண்ட துார மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் பயண நேரம் கணிசமாக அதிகரிக்கும். இதனால், விமானங்கள் தாமதமாக இலக்கை சென்றடைய வாய்ப்புள்ளன' என குறிப்பிட்டுள்ளது.

எனவே, பயணியர் விமான நிலையத்திற்கு புறப்படும் முன், தாங்கள் செல்லும் விமானத்தின் தற்போதைய நிலையை இணையதளம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளும்படி இரு நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளன.

தப்பியது 'இண்டிகோ' விமானம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள திபிலிசியில் இருந்து, டில்லிக்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், ஈரான் வான்வெளி மூடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியை கடந்து வந்தது. ஈரானிய வான்வெளியில் இருந்த ஈரான் அல்லாத பதிவெண் கொண்ட கடைசி பயணியர் விமானம் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மற்ற விமானங்கள் தங்களின் வழித்தடத்தை மாற்றியமைத்தன; சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜூனில், இஸ்ரேலுக்கு எதிரான 12 நாள் போரின் போதும், இஸ்ரேல் - -ஹமாஸ் போரின் போதும், இஸ்ரேலுடன் துப்பாக்கி சண்டை நடத்தியபோதும் ஈரான் வான்வெளியை மூடியிருந்தது. ஈரான் வான்வெளி, கிழக்கு - மேற்கு நோக்கி அமைந்துள்ளதால், 'லுப்தான்சா' போன்ற பல சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.



இந்தியர்கள் குழு இன்று வருகை ஈரானில் சிக்கியுள்ள 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள், கிடைக்கும் வழியை பயன்படுத்தி அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தியது. அதேசமயம், அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள், ஈரானில் வசித்து வரும் இந்தியர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக, பல்வேறு இடங்களில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பல கட்ட முயற்சிகளுக்கு பின், முதற்கட்டமாக, ஒரு சில இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு திரும்ப உள்ள இந்தியர்கள் தங்கள் ஆவணங்களுடன் தயாராக இருக்க துாதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஆவணங்களை சமர்ப்பித்த இந்தியர்கள், முதற்கட்டமாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் சரியாக நடக்கும் பட்சத்தில், முதற்கட்ட இந்தியர்கள் குழு இன்று நாடு திரும்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.








      Dinamalar
      Follow us