இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி
இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : ஏப் 01, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : இரவிகுளம் தேசிய பூங்கா இன்று (ஏப்.1) திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ. சுற்றளவைக் கொண்டது. அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவத்திற்காக பிப்ரவரி, மார்ச்சில் பூங்கா மூடப்பட்டு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும். அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக பூங்கா மூடப்பட்ட நிலையில் இன்று திறக்கப்படுகிறது. ராஜமலைக்கு இன்று முதல் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர். அங்கு புதிதாக பிறந்த ஏராளமான குட்டிகள் பயணிகளை கவரும் வகையில் உலா வருகின்றன.