காலேஸ்வரம் அணை திட்டத்தில் முறைகேடு: முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்
காலேஸ்வரம் அணை திட்டத்தில் முறைகேடு: முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்
ADDED : ஆக 08, 2025 12:18 AM

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டம் நிறைவே ற்றப்பட்டது.
ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா என்ற இடத்தில் கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணையும் இடத்தில் பிரமாண்ட அணை கட்டி, மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
முறைகேடு அதன்படி 1.05 லட்சம் கோடி ரூபாயில் அணை கட்டி முடிக்கப்பட்டது.
சந்திரசேகர ராவ் ஆட்சி முடியும் நேரத்தில், அதாவது 2023, அக்டோபரில் அணையின் ஐந்து துாண்கள் சரிந்து, 4 அடிக்கு கீழே இறங்கியது.
மேலும் நீரேற்றும் கட்டுமானமும் முழுமையாக இடிந்து விழுந்து நீரில் மூழ்கியது. இதனால், அணை கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப் பட்டது. 15 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்திய 665 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில், 'அணை கட்டுமானம் இடிந்து விழுந்ததற்கு தவறான வடிவமைப்பே காரணம் என கூறப்பட்டுள்ளது.
பின்னடைவு 'நி புணர்கள் எச்சரித்தும், அமைச்சரவையிடம் கூட ஆலோசிக்காமல் அணை கட்டும் திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டு உ ள்ளது.
சந்திரசேகர ராவ் எடுத்த இம்முடிவுக்கு நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவும், நிதியமைச்சராக இருந்த எட்லா ராஜேந்திராவும் உடந்தையாக இருந்தனர் என்றும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி சட்டசபையில் விவாதம் நடத்தி நடவடிக்கை எடுக்க காங்., அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில், தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விசாரணை கமிஷனின் இந்த அறிக்கை சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
. - நமது சிறப்பு நிருபர் -