ADDED : மார் 11, 2025 03:40 AM

கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடினர். நம் கட்சி நிர்வாகிகள் பலரே கூட்டத்திற்கு வராமல் கும்பமேளாவுக்கு சென்றதாகக் கூறினர். இவ்வளவு பேர் குளித்த பிறகும் கங்கை எப்படி சுத்தமாக இருக்கும்? நாம் நம் நதிகளை தாய் என்று அழைக்கிறோம்; ஆனால் அவற்றை சுத்தமாக வைத்திருப்பதில்லை.
- ராஜ் தாக்கரே
தலைவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா
நியாயமாக நடக்கவில்லை!
போலி வாக்காளர்கள் குறித்த பிரச்னையை முதலில் எழுப்பியவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தவறான வாக்காளர் பட்டியல் என்பது, கவலைக்குரிய விஷயம். ஆனால் தேர்தல் கமிஷன் இதை கண்டுகொள்ளவில்லை. நியாயமாகவும் தேர்தலை நடத்துவதில்லை.
- கல்யாண் பானர்ஜி,
லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்
வேடிக்கையாக உள்ளது!
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தன் ஆட்சியின் கடைசி கட்டத்தில் உள்ளார். இனி ஒருபோதும் அவர் ஆட்சிக்கு வர முடியாது. அதற்காக வாக்காளர் பட்டியல், ஓட்டு இயந்திரம் ஆகியவை குறித்து பிரச்னையை கிளப்புகின்றனர். திரிணமுல் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நாங்கள் எப்படி வாக்காளர் பட்டியலை மாற்ற முடியும்?
- தினேஷ் சர்மா
ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,