தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பொய் பேசுவது சரியா?

பொய் பேசுவது சரியா?

பொய் பேசுவது சரியா?


ADDED : அக் 07, 2024 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, சிறுபான்மை விவகாரத் துறையை, முஸ்லிம் விவகாரத்துறை போல் மாற்றி விட்டனர். சிறுபான்மையினரில் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், சிறுபான்மையினர் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ராகுல் பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஏன் இந்த நாடகம்!


கர்நாடக முதல்வர் சித்தராமையா, தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார். ஏன் இப்படி நாடகமாடுகிறார் என தெரியவில்லை. ஆனால், மக்களிடம் எதையும் மறக்க மாட்டார்கள்.

குமாரசாமி, மத்திய அமைச்சர், மத சார்பற்ற ஜனதா தளம்

பாடம் புகட்டுவர்!


ஜார்க்கண்ட் மாநில அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதற்காக, அவற்றை எதிர்த்து பா.ஜ.,வினர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடர்கின்றனர். விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவர்.

கல்பனா சோரன், எம்.எல்.ஏ., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us