பா.ஜ.,வில் இணைய முடிவா ? மாஜி முதல்வர் சம்பய் சோரன் மழுப்பல்
பா.ஜ.,வில் இணைய முடிவா ? மாஜி முதல்வர் சம்பய் சோரன் மழுப்பல்
ADDED : ஆக 17, 2024 10:38 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் அம்மாநில அமைச்சருமான சம்பய் சோரன், பா.ஜ.வில் இணையப்போவதாக வந்த செய்திக்கு மழுப்பலான பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாநில ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல்வராக இருந்த ஹோமந்த் சோரன், மீது நில மோசடி, நிலக்கரி சுரங்க மோசடி போன்ற வழக்குகளில் அமலாக்கத்துறையால் ஜன.31-ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சம்பாய் சோரன் பிப். மாதம் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஜூன் 28-ல் ஹேமந்த் சோரனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார் ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக வேண்டி சம்பய் சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஜூலை-4-ம் தேதி முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
தற்போது அமைச்சராகவும், ஜே.எம்.எம்., கட்சி துணை தலைவராக இருக்கும் சம்பய் சோரன், கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலக வைத்ததால், அதிருப்தியில் இருப்பதாகவும், பா.ஜ.வில் இணைய திட்டமிட்டு, மாநில தலைவர்களுடன் ரகசிய தொடர்பு கொண்டு வருவதாக செய்திகள் வெளியாயின.
இது குறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், நான் பா.ஜ.,வில் இணையப்போவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதுபற்றி எனக்கு நிச்சயமாக தெரியாது, இன்றுவரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் தான் இருக்கிறேன் என்றார்.

