தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நிக்கோபர் வளர்ச்சி திட்டம் மோசடியா? ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி!

 நிக்கோபர் வளர்ச்சி திட்டம் மோசடியா? ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி!

 நிக்கோபர் வளர்ச்சி திட்டம் மோசடியா? ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி!


ADDED : மே 01, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தி வரும், 'கிரேட் நிக்கோபர்' ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை, மோசடி திட்டம் என விமர்சித்த ராகுலுக்கு முன்னாள் விமான படை தளபதியும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பதுாரியா பதிலடி தந்துள்ளார்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஒரு யூனியன் பிரதேசம் ஆகும். இங்கு வடக்கில் உள்ள தீவுக்கூட்டங்கள் அந்தமான் என்றும், தெற்கில் உள்ள தீவு கூட்டங்கள் நிக்கோபர் என்றும் அழைக்கப்படுகின்றன.

நிக்கோபர் தீவில் உள்ள, 'கேம்ப்பெல் பே' எனும் பகுதியில் மத்திய அரசு, 'கிரேட் நிக்கோபர்' ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சர்வதேச துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி கட்டமைப்புகள், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவை அமைய உள்ளன.

காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'இத்திட்டம், நிக்கோபரின் இயற்கை வளம் மற்றும் பழங்குடியின பாரம்பரியத்திற்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய மோசடி. மிக மோசமான குற்றம்' என கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் விமானப் படை தளபதியும், பா.ஜ., மூத்த தலைவருமான பதுாரியா கூறியதாவது:

கிரேட் நிக்கோபர் திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் மலேஷியா நாடுகளுக்கு இடையே உள்ள குறுகிய கடல் வழிப்பாதையான மலாக்கா ஜலசந்தியில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளது.

சீனாவுக்கான 75 சதவீத கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்த மலாக்கா ஜலசந்தி வழியாகவே செல்கிறது.

இங்கு நம் கண்காணிப்பு போர் காலங்களிலும், வணிக ரீதியாகவும் நம்மை வலிமையான சக்தியாக மாற்றும்.

பழங்குடியின நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது காடுகள் அழிக்கப்படுவதாகவோ கூறுவது தவறானது. மொத்த வனப்பகுதியில் வெறும் 1.78 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும். பழங்குடியினரை பாதுகாக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் அவர்களுக்கு வளர்ச்சியை மட்டுமே வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us