ADDED : செப் 17, 2024 11:54 AM

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
திருவனந்தபுரம் எம்.பி.,யாக உள்ள சசிதரூர். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மனித வளமேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். மேலும் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இவருடன் நெருக்கமாக பழகி வந்த சுனந்தா புஷ்கர் மரணத்தில் பல சந்தேககங்கள் எழும்பின. இருப்பினும் பெரிய அளவில் சிக்காமல் ஒதுங்கி கொண்டார்.
இவர் தற்போது பா.ஜ.,வில் சேர உள்ளதாக ஒரு தகவல் கேரளாவில் பேசப்படுகிறது. இவர் டில்லியில் பாஜ., மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இவர் பா.ஜ., வில் சேர்ந்தால் கேரளாவில் பா.ஜ., வை வலுப்படுத்த முடியும் என நம்புகின்றனர். சசிதரூர் பா.ஜ.,வில் சேருவார் என்ற தகவல் பரவுவது இது முதல் முறை அல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்று ஒரு பேச்சு அடிப்பட்டது.

