சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரதமரா? : கிண்டலுக்கு ஆளான நடிகை கங்கனா ரணாவத்
சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரதமரா? : கிண்டலுக்கு ஆளான நடிகை கங்கனா ரணாவத்
ADDED : ஏப் 05, 2024 09:06 PM

புதுடில்லி : 'இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' என, பா.ஜ., வேட்பாளர் கங்கனா ரனாவத் கூறியதால், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார்.
லோக்சபா தேர்தலில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் லோக்சபா வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ., அறிவித்தது. அங்கு அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'நாடு சுதந்திரம் அடைந்தபோது, நம் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?' என, கேள்வி எழுப்பினார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு என தெரியாமல் சுபாஷ் சந்திர போஸ் என கங்கனாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டு மின்றி, டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிக், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களில் கங்கனாவின் கருத்தை கிண்டல் செய்துள்ளனர்.

