ADDED : பிப் 05, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., - எம்.பி., ரீட்டா பிரதா பானர்ஜி நேற்று பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி, 2018ல் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
கடந்த 1947ல், நாடு சுதந்திரமடைந்தபோது, வங்கம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேற்கு பகுதிக்கு மேற்கு வங்கம் என்றும் கிழக்கு பகுதிக்கு கிழக்கு பாகிஸ்தான் என்றும் பெயரிடப்பட்டது.
அதன்பின், 1971ல், கிழக்கு பாகிஸ்தான், புதிய நாடாக வங்க தேசம் என அறிவிக்கப்பட்டது. தற்போது கிழக்கு பாகிஸ்தான் என இல்லாத நிலையில், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையிலும் மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையிலும் மாநிலத்தின் பெயரை வங்கம் என மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.