ADDED : நவ 08, 2024 10:57 PM

பலரும் அரிசி கழுவிய நீரை, சாக்கடையில் கொட்டுகின்றனர். இந்த தண்ணீரில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் பலருக்கும் தெரிவது இல்லை.
வீடுகளில் தினமும் சோறு சமைக்கும் முன்பாக, அரிசியை நீர் விட்டு களைவர். இந்த தண்ணீரின் அருமை தெரியாமல், கீழே கொட்டுகின்றனர். இன்றைய நாட்களில் பொது மக்கள், தங்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றி கொள்ள, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது, உணவு கட்டுப்பாடு என, பல்வேறு வழிகளை கையாள்கின்றனர்.
பல நோய்களுக்கு, நம் வீட்டிலேயே மருந்துகள் உள்ளன. இவற்றில் அரிசி கழுவிய நீரும் ஒன்றாகும். இதில் உள்ள புரத சத்துகள் நமக்கு பல பலன்களை அளிப்பதாக, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அரிசி கழுவிய நீரை அருந்தினால், பலவிதமான நோய்கள் குணமாகும். இந்த நீரில் வைட்டமின் 'பி', 'இ' பொட்டாசியம் உட்பட பல்வேறு புரத சத்துகள் உள்ளன.
இதை அருந்துவதால், உடல் எடை குறையும். நீரில் குறைவான கலோரி இருப்பதால், உடலின் கொழுப்பை கரைக்க உதவும். சருமம் பளபளப்பாகும். தலைமுடியை வளர செய்யும்.
அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி, முகத்தை கழுவினால் முகம் பட்டு போன்று பளபளக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை ஆதிகரிக்கும். இந்நீரை அருந்தினால் இதயம் வலுப்பெறும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
அரிசி கழுவிய நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். உடற் பயிற்சி செய்து முடித்த பின், ஆற வைத்து குடிப்பது நல்லது.
- நமது நிருபர் -