‛வேற இடமே கிடைக்கலையா...': தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர்: ரயிலை நிறுத்திய டிரைவரின் மனிதநேயம்
‛வேற இடமே கிடைக்கலையா...': தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர்: ரயிலை நிறுத்திய டிரைவரின் மனிதநேயம்
ADDED : ஆக 25, 2024 05:53 PM

லக்னோ: உ.பி.,யில் பஹ்ரைச் மாவட்டத்தில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபரை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் அந்த நபர் உயிர் தப்பினார்.
உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் இருந்து பிரதாப்கர்க் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, தண்டவாளத்தில் யாரோ படுத்து இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அவரும், ரயில் ஊழியர்களும் கீழே இறங்கி சென்று பார்த்த போது, அங்கு முதியவர் ஒருவர் குடையுடன் தூங்கி கொண்டு இருந்தார். அவரை எழுப்பி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன் பிறகு ரயில் கிளம்பி சென்றது. ரயில் ஓட்டுநரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

