இதுக்கு ஒரு ‛‛எண்ட் கார்டு'' போடுங்க: மணிப்பூரில் தொடரும் கலவரம்: ஊரடங்கு அமல்
இதுக்கு ஒரு ‛‛எண்ட் கார்டு'' போடுங்க: மணிப்பூரில் தொடரும் கலவரம்: ஊரடங்கு அமல்
UPDATED : செப் 10, 2024 04:11 PM
ADDED : செப் 10, 2024 04:09 PM

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே முதல் நடந்து வரும் கலவரம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடையில் சிறிது காலம் கலவரம் ஓய்ந்திருந்த இந்த கலவரம் தற்போது மீண்டும் வெடித்து உள்ளது. தற்போது ஒரு படி மேலே சென்று டுரோன் மூலமும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை கோரி, கவர்னர் மாளிகை மற்றும் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதற்றம்
இன்று பல்கலை ஒன்றின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை விரட்டியடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஊரடங்கு
கலவரம் தொடர்வதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தவுபல் மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் வரும் 15ம் தேதி வரை இணைய சேவையை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

