தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாக்.,கிற்கு உளவு பார்த்த ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் கைது

பாக்.,கிற்கு உளவு பார்த்த ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் கைது

பாக்.,கிற்கு உளவு பார்த்த ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் கைது


UPDATED : நவ 27, 2026 10:00 PM

ADDED : நவ 27, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 10:00 PM ADDED : நவ 27, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் உள்ள முக்கிய இடங்களின் படங்கள் மற்றும் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு அனுப்பியதாக சத்னாம் சிங் என்ற வாலிபரை ராணுவ உளவு பிரிவினரும், போலீசாரும் இணைந்து கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினர், நம் நாட்டின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க இங்கு உள்ள நபர்களை பயன்படுத்துவதாக ராணுவ உளவு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

அவர்களை கண்டறிய ராணுவ உளவு பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் ஜக்ராவன் கிராமத்தை சேர்ந்த சத்னாம் சிங் என்ற சட்டுவை, பதிண்டா போலீசார் கைது செய்தனர். ராணுவ உளவுப் பிரிவு, பதிண்டா உளவுப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உளவாளி கைது குறித்து போலீசார் கூறியதாவது:

- சத்னாம் சிங், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., உளவாளிகளின் அறிவுறுத்தலின்படி பதிண்டா ராணுவ முகாமில் உள்ள முக்கிய இடங்களைக் கண்காணித்து தகவல்களை அனுப்பி உள்ளார்.

- அவருடைய மொபைல் போனை ஆய்வு செய்ததில், ராணுவ முகாமின் இருப்பிடம், அப்பகுதியின் புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் இருந்தன. அந்த உரையாடல்கள், புகைப்படங்கள் யாருக்கு அனுப்பப்பட்டன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us