தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்; போலீசார் முறியடிப்பு

டில்லியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்; போலீசார் முறியடிப்பு

டில்லியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்; போலீசார் முறியடிப்பு


UPDATED : அக் 24, 2025 09:52 PM

ADDED : அக் 24, 2025 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2025 09:52 PM ADDED : அக் 24, 2025 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். போலீசார் அந்த சதித்திட்டத்தை முறியடித்தனர்.

டில்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டில்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், தீபாவளி பண்டிகை காலத்தின்போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் பெரிய பயங்கரவாத தாக்குதல் சதியை போலீசார் முறியடித்து உள்ளனர்.

இதில் ஒருவர் டில்லியின் சாதிக் நகரைச் சேர்ந்தவர்; மற்றவர் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைகளால் டில்லியில் ஏற்படக்கூடிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது,' என்று கூடுதல் காவல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) பிரமோத் குஷ்வாஹா செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இருவருடன் தொடர்புடைய பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வந்தது அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us