இஸ்ரோ அறிவித்த 103 காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!
இஸ்ரோ அறிவித்த 103 காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!
ADDED : செப் 20, 2024 07:25 AM

புதுடில்லி: இஸ்ரோ மனித விண்வெளி பயண மையத்தில் 103 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 9.
இஸ்ரோ மனித விண்வெளி பயண மையத்தில் மருத்துவ அதிகாரி, விஞ்ஞானி, வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவ அதிகாரி- 3,
விஞ்ஞானி/பொறியாளர் - 10,
தொழில்நுட்ப உதவியாளர் - 28,
விஞ்ஞானி உதவியாளர் - 1,
டெக்னீஷியன் - 43,
வரைவாளர் - 13,
உதவியாளர் - 5,
கல்வித் தகுதி என்ன?
மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். 2 வருடம் முன் அனுபவம் வேண்டும்.
விஞ்ஞானி/பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தொடர்புடைய பிரிவில் B.SC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ட்ராப்ட்ஸ்மென் பணியிடங்களுக்கு தொடர்புடைய ஐடிஐ பிரிவில் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://www.hsfc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.