எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் இஸ்ரோ!
எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் இஸ்ரோ!
ADDED : ஜன 03, 2024 05:44 PM

புதுடில்லி: எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன் -9 என்ற கனரக ஏவு வாகனம் மூலம் அடுத்த தலைமுறை தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை (ஜிசாட் 20) இந்தியா விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முதல் முறையாக, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் உதவியுடன் தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் 'நியூ ஸ்பேஸ் இந்தியா' மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன் -9 என்ற கனரக ஏவு வாகனம் மூலம் அடுத்த தலைமுறை தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை (ஜிசாட் 20) இந்தியா விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அமெரிக்கவின் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.