ADDED : ஜன 10, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில், 'ஸ்பேடெக்ஸ்' எனப்படும் விண்வெளியில், செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, ராக்கெட் ஒன்றை அனுப்பியது. இதில் இடம்பெற்றுள்ள இரண்டு செயற்கைக்கோள்களை, விண்வெளியில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைப்பதே, இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த ஒருங்கிணைப்புக்கு இரண்டு முறை முயற்சிகள் நடந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் அவை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த செயற்கைக்கோள்கள், ஒன்றுக்கு ஒன்று விலகியிருந்தன. இதனால் ஒருங்கிணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இரண்டும் ஒருங்கிணைப்பு பாதையில் இன்று மீண்டும் இணையும் என, அதில் கூறப்பட்டு உள்ளது.