தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை


ADDED : ஜூன் 15, 2025 01:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2025 01:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக ராக்கெட் ஏவும் சோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ட்ரோன் உதவியுடன் ராக்கெட் ஏவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது முதல் முறையாக, உத்தரபிரதேசம் மாநிலம், குஷிநகரில் ராக்கெட் ஏவும் சோதனையை இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் கூறியதாவது:

ஆமதாபாத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்தி ராக்கெட் ஏவும் சோதனை நடத்தினோம். தற்போது உத்தரபிரதேசத்தில் ஒரு ராக்கெட் மூலம் ஒரு செயற்கைக்கோள் நேரடியாக ஏவப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.


த்ரஸ்ட் டெக் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், 15 கிலோ எடையுள்ள ராக்கெட் 1.1 கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து பாதுகாப்பாக தரையில் இறங்கியது.வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 900 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சோதிக்க உள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us