475 கி.மீ., உயரத்தில் 2 'சேட்டிலைட்' இணைப்பு சாதித்து காட்டியது இஸ்ரோ
475 கி.மீ., உயரத்தில் 2 'சேட்டிலைட்' இணைப்பு சாதித்து காட்டியது இஸ்ரோ
ADDED : ஜன 17, 2025 02:26 AM

பெங்களூரு,
விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் மிகப் பெரிய முயற்சியை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனையை படைத்துள்ள நான்காவது நாடு என்ற பெருமை, நம் நாட்டுக்கு கிடைத்துள்ளது.
விண்வெளி துறையில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இந்த துறையில் கோலோச்சும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக நம் நாடு விளங்கி வருகிறது.
நிலவில் நம் நாடு கால் பதித்ததுடன், செவ்வாய் கிரகத்துக்கும் ஆய்வு செய்ய செயற்கைக்கோளை அனுப்பியது. அடுத்ததாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சியும் வெற்றிகரமாக அமைந்தது.
இதற்கிடையே, விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது. இதற்காக, பி.எஸ்.எல்.வி., - 60 ராக்கெட், கடந்தாண்டு டிச., 30ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டது.
இதில், விண்வெளியில் இணைக்கும் முயற்சிக்காக, 'எஸ்டிஎக்ஸ் 01' எனப்படும் 'சேசர்' மற்றும் எஸ்டிஎக்ஸ் 02' எனப்படும் 'டார்க்கெட்' என்ற இரண்டு சிறிய செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன.
தலா, 220 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள், பூமியில் இருந்து 475 கி.மீ., உயரத்தில் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்த செயற்கைக்கோள்களை இணைக்கும் இரண்டு முயற்சிகள், சில தொழில்நுட்ப காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரண்டு செயற்கைக்கோள்களும், 3 மீட்டர் அதாவது, 9 அடி இடைவெளியில் நிறுத்தப்பட்டன. பின்னர், மீண்டும் தங்களுடைய சுற்று வட்டப் பாதைக்கு திரும்பின.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால், செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சி நேற்று காலை வெற்றிகரமாக நடந்தது. இதன்
தொடர்ச்சி 15ம் பக்கம்