நடிகையிடம் அத்துமீறல் ஐ.டி., நிறுவன மேலாளர் கைது
நடிகையிடம் அத்துமீறல் ஐ.டி., நிறுவன மேலாளர் கைது
ADDED : மார் 23, 2026 02:40 AM
கொச்சி: கேரளாவில், பிரபல மலையாள நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.டி., நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் விபின் ராய், 39; ஐ.டி., நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவர், சமூக வலைதளத்தில் பிரபல மலையாள நடிகையை பின்தொடர்ந்து வருகிறார்.
அதில், அவருக்கு அடிக்கடி குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, விபின் ராயை சமூக வலைதளத்தில், 'பிளாக்' செய்தார்.
சமீபத்தில், கொச்சியின் கலுார் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்துக்கு சென்ற நடிகையை, விபின் ராய் பின்தொடர்ந்து சென்றார். அப்போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவர், அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து நடிகை அளித்த புகாரின்படி, விபின் ராயை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
