ADDED : மே 17, 2026 03:45 AM

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, 'அமிர்த காலம்' என்பது, 'மரண காலமாக' மாறி உள்ளது. 'நீட்' வினாத்தாள் கசிவால் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
தாராளமாக செல்லலாம்!
மே.வங்க சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த திரிணமுல் காங்., விரைவில் எழுச்சி பெறும். கட்சியை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டும். மாற்று கட்சிகளுக்கு செல்ல விரும்புவோர் தாராளமாக செல்லலாம்; யாரையும் தடுக்க மாட்டேன். திரிணமுல் காங்., விரைவில் வீறுநடை போடும்.
மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சி
மோதல் இல்லை!
காங்., மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா போன்றோருடன் எந்த மோதலும் இல்லை. அமைச்சரவை மற்றும் கட்சி ரீதியான முடிவுகள் அனைத்தும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே எடுக்கப்படுகின்றன. ஊடகங்களில் வெளியாவது போல் எங்களுக்குள் எந்த சண்டையும், வேறுபாடும் இல்லை.
வி.டி.சதீஷன் கேரள முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், காங்கிரஸ்
