தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நாட்டை பிளவுபடுத்துகிறது!

நாட்டை பிளவுபடுத்துகிறது!

நாட்டை பிளவுபடுத்துகிறது!


ADDED : மார் 17, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமூகத்தை ஒழுங்கமைக்க, ஜாதி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அது, சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்தி நாட்டை பிளவுபடுத்துகிறது. ஜாதி, மொழியால் மக்கள் பிளவுபடுவதையே முந்தைய அரசுகள் விரும்பின. இது, ஜம்மு - காஷ்மீர் அமைதியின்மை, நக்சல் ஆதிக்கம், மொழி சார்ந்த மோதல்களுக்கு வழிவகுத்தது.

யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,

மத மாற்றங்களுக்கு தீர்வு!


மத மாற்றத்திற்கு ஆளாகும் பல பெண்கள், திருமணமான பின் கைவிடப்படுகின்றனர். இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இத்தகைய நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் சட்ட விரோத மதமாற்ற தடை சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனர்.

தேவேந்திர பட்னவிஸ் மஹா., முதல்வர், பா.ஜ.,

கட்டண சலுகையை வழங்குங்கள்!


கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான, 50 சதவீத ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். இச்சலுகையை நிறுத்தி வைத்துள்ளது, முதியோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை, எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பதை ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

தாரிக் அன்வர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us