பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்றுவது முக்கியம்; ஜெய்சங்கர்
பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்றுவது முக்கியம்; ஜெய்சங்கர்
ADDED : நவ 22, 2026 09:50 PM

புதுடில்லி: டில்லியில் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாம் பெரெண்ட்செனுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அவர் பேசியதாவது; இருநாடுகளுக்கு இடையேயான உறவை உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளோம். நாம் உருவாக்கியுள்ள செயல்திட்டம் முன்னோக்கிச் செல்வதற்கான அடித்தளமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளோம். குறிப்பாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு கூட்டாண்மை உள்பட பல புரிந்துணர்வுகள் செய்துள்ளோம். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.
உக்ரைன் மோதல், கருங்கடல் சூழல் குறித்து ஆலோசித்தோம். மேற்காசிய மோதலும், அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதித்தோம். நமக்குப் பொதுவான சவால்கள் உள்ளன. ஒன்று பயங்கரவாதம், மற்றொன்று பருவநிலை மாற்றம். இவற்றில் நாம் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியமானது, இவ்வாறு அவர் கூறினார்.
