ADDED : ஜன 18, 2026 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் ஆண்டுதோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும். டிசம்பர் இறுதியில் வெப்ப நிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்படும். கடந்த மாதம் வழக்கத்தை விட முன்கூட்டியே டிச.15ல் காலையில் உறைபனி ஏற்பட்டு இது பல பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை நீடித்தது. அதன்பிறகு வெப்ப நிலை படிப்படியாக உயர்ந்த நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று திடீரென காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காலையில் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்து கடுங்குளிர் நிலவியது. பகலில் வெயிலுடன் குளிர் இருந்தது. காலநிலை மாற்றம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்திருந்தனர்.

