sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'15 நாட்கள் சிறையில் வைத்தால் சரியாகிவிடும்'; வருவாய் முதன்மை செயலரை குட்டிய ஐகோர்ட்

/

'15 நாட்கள் சிறையில் வைத்தால் சரியாகிவிடும்'; வருவாய் முதன்மை செயலரை குட்டிய ஐகோர்ட்

'15 நாட்கள் சிறையில் வைத்தால் சரியாகிவிடும்'; வருவாய் முதன்மை செயலரை குட்டிய ஐகோர்ட்

'15 நாட்கள் சிறையில் வைத்தால் சரியாகிவிடும்'; வருவாய் முதன்மை செயலரை குட்டிய ஐகோர்ட்


ADDED : ஜன 30, 2025 11:39 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியது. 'உங்களை 15 நாட்கள் சிறையில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்று கூறி வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியா தலையில் குட்டி உள்ளது.

மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி. இவரது உறவினர் தம்மண்ணா. இவர் முன்னாள் அமைச்சர். இவர்கள் இருவரும் சேர்ந்து, ராம்நகர் மாவட்டம் கேட்டகனஹள்ளி கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சமூக ஆர்வலர் ஹிரேமத் லோக் ஆயுக்தாவில் புகார் செய்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா போலீசார், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். குமாரசாமி, தம்மண்ணா மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆஜராக உத்தரவு


குமாரசாமி, தம்மண்ணா மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் ஹிரேமத் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சோமசேகர், வெங்கடேஷ் நாயக் விசாரித்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி நடந்த விசாரணையின் போது, அடுத்த விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணைக்கு அரசின் வருவாய் துறை முதன்மை செயலர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதன்படி நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் வருவாய்த் துறை முதன்மைச் செயலர் ராஜேந்திர கட்டாரியா ஆஜரானார்.

அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிரண் ரோனா வாதாடுகையில், ''வருவாய் துறையை மேம்படுத்தும் வகையில் மின் கணக்கு முறையை ராஜேந்திர கட்டாரியா உருவாக்கி உள்ளார். இந்த வழக்கில் அரசு 14 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளது. விரிவான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளோம்,'' என்றார்.

சிஸ்டம் மோசம்


மனுதாரர் தரப்பு வக்கீல் பசவராஜ் வாதாடுகையில், ''அரசு நிலத்தை குமாரசாமி உள்ளிட்டோர் ஆக்கிரமித்து உள்ளதை தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லோக் ஆயுக்தா கூறியபடி நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இல்லை,'' என்றார்.

விசாரணையின் ஒரு கட்டத்தில் நீதிபதிகள் முன்பு, ''சிஸ்டம் ரொம்ப மோசம்னு எல்லாருக்கும் தெரியும் சார். என்னால் முடிந்தவரை நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என்று ராஜேந்திர கட்டாரியா கூறினார்.

இதை கேட்டு கடும் கோபமடைந்த நீதிபதிகள் கூறியதாவது:

உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும் பணியை நாங்கள் துவங்குவோம். சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியாது. உங்களது சிஸ்டத்தை பார்த்து, மக்கள் சிரிக்கின்றனர் தெரியுமா. உங்கள் சம்பளத்தை நிறுத்துவோம். பிரதிவாதிகள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், ஐந்து ஆண்டுகளாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா.

இன்னும் இரண்டு வாரங்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் திறமையற்றவராக இருந்தால், உங்களை எங்கு வேண்டுமென்றாலும் அனுப்புவோம். 15 நாட்கள் உங்களை சிறையில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும். இ - கட்டா நடைமுறை ஊழலின் தொட்டில். எந்த விஷயத்திற்கும் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு நீதிபதிகள் கூறி, விசாரணையை பிப்., 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us