தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடைசி பட்ஜெட்டாக இருக்கும்!

கடைசி பட்ஜெட்டாக இருக்கும்!

கடைசி பட்ஜெட்டாக இருக்கும்!


ADDED : பிப் 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உ.பி., பட்ஜெட்டில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு கடைசி பட்ஜெட்டாக இருக்கும். சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. சொல்லப் போனால், இது வெறும் விளம்பர பட்ஜெட் தான்.

அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

அறிமுகப்படுத்த வேண்டும்!


எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தங்கள் கடமையை செய்ய தவறினால், ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, அவர்களை பதவியிலிருந்து நீக்கும், 'திரும்ப பெறும் உரிமை' என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இது போன்ற நடைமுறை ஏ தோ ஒரு வடிவில் உள்ளது.

ராகவ் சத்தா ராஜ்யசபா எம்.பி., - ஆம் ஆத்மி

இது வெறும் துவக்கம் தான்!


அசாமில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணியின் போது, 2.43 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நீக்கங்கள் நடந்தன. இது வெறும் துவக்கம் தான். சிறப்புத் தீவிரத் திருத்தம் நடக்கும் போது இன்னும் கூடுதலானவர்கள் நீக்கப்படுவர்.

ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us