தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அனைத்தும் நாடகம்!

அனைத்தும் நாடகம்!

அனைத்தும் நாடகம்!


ADDED : ஏப் 21, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர், காரப்பொரி வாங்கி சாப்பிட்டது திட்டமிடாத நிகழ்வு என்றால், அவர் செல்லும் முன் அந்த இடத்திற்கு கேமராக்கள் எப்படி வந்தன? இது திட்டமிடப்பட்ட நிகழ்வு; அவரது பாக்கெட்டில் 10 ரூபாய் நோட்டுகள் இருந்தன; இவற்றை நம்ப முடிகிறதா ? இவை அனைத்தும் நாடகம் .

மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

மாபெரும் பின்னடைவு!


அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சில் பாகிஸ்தான் பங்கு பெற்றிருப்பது, நம் நாட்டிற்கு மாபெரும் பின்னடைவு. பிரதமர் மோடியின் பிராந்திய மற்றும் உலகளாவிய செயல்பாடுகள், பாகிஸ்தானை தனிமைப்படுத்த தவறிவிட்டன. நம் நாட்டை விட, அமெரிக்காவை கையாள்வதில் அந்நாடு வெற்றி பெற்றிருப்பது கண்கூடாக தெரிகிறது.

ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

முரண்பாட்டின் உச்சம்!


பாக்., நண்பராக திகழும் காங்., அந்நாட்டை கையாள்வது குறித்து அறிவுறுத்துவது முரண்பாட்டின் உச்சம். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராமல் தவறியதையும், நம் நாட்டின் இறையாண்மையில் சமரசம் செய்ததையும் தேசம் மறக்கவில்லை. முதலில், பாக்.,கை புகழ்வதை அக்கட்சி நிறுத்த வேண்டும்.

பிரதீப் பண்டாரி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us