ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்
UPDATED : பிப் 22, 2026 06:41 PM
ADDED : பிப் 22, 2026 02:23 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன்படி, அப்பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

