டில்லி முதல்வராகிறார் ரேகா; முதல்முறை எம்.எல்.ஏ.,வுக்கு 'ஜாக்பாட்'
டில்லி முதல்வராகிறார் ரேகா; முதல்முறை எம்.எல்.ஏ.,வுக்கு 'ஜாக்பாட்'
ADDED : பிப் 20, 2025 03:06 AM

தேசிய தலைநகர் டில்லியின் அடுத்த முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா, 50, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக பலருடைய பெயர்கள் கூறப்பட்டு வந்த நிலையில், பா.ஜ., தலைமை மீண்டும், யாரும் எதிர்பார்க்காத ஒருவரை தேர்வு செய்துள்ளது. இன்று பா.ஜ., அரசு பதவியேற்க உள்ளது.
தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு கடந்த, 5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 70 இடங்களில், 48 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதன் வாயிலாக, 27 ஆண்டுகளுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைகிறது.
கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, 22 இடங்களில் வென்றது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தல் முடிவுகள், 8ம் தேதியே வெளியானாலும், முதல்வர் யார் என்பது தொடர்பாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அவர் நாடு திரும்பியதும்தான், புதிய முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும், புதிய அரசு பதவியேற்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சட்ட சபை தேர்தலில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மா, முதல்வராவார் என்று பரவலாக பேசப்பட்டது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஷாஹிப் சிங் வர்மாவின் மகனான இவருக்கே அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. இதைத் தவிர, மற்றொரு முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜின் மகளான, டில்லி எம்.பி., பான்சுரி சுவராஜ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழுக் கூட்டம் டில்லியில் நேற்று காலை நடந்தது. அதில், டில்லி முதல்வரை தேர்வு
தொடர்ச்சி 16ம் பக்கம்
- நமது சிறப்பு நிருபர் -