ஜடேஜா, வாஷிங்டன் அபாரம் : 235 ரன்னுக்கு நியூசி., 'ஆல் அவுட்'
ஜடேஜா, வாஷிங்டன் அபாரம் : 235 ரன்னுக்கு நியூசி., 'ஆல் அவுட்'
UPDATED : நவ 01, 2024 06:48 PM
ADDED : நவ 01, 2024 04:48 PM

மும்பை: மும்பை டெஸ்ட் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுழலில் அசத்திய ஜடேஜா 5, வாஷிங்டன் 4 விக்கெட் சாய்த்தனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, 2-0 என இந்திய மண்ணில் முதன் முறையாக தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம், பேட்டிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு கான்வே (4), லதாம் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. வாஷிங்டன் சுழலில் லதாம் (28), ரச்சின் (5) போல்டாகினர். அரைசதம் அடித்த வில் யங் (71), ஜடேஜா சுழலில் சிக்கினார். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, பிளன்டெல் (0), பிலிப்ஸ் (17), இஷ் சோதி (7), ஹென்றி (0) என வரிசையாக அவுட்டாக்கி அனுப்பி வைத்தார்.
நீண்ட நேரம் தொல்லை தந்த மிட்செலை (82), வாஷிங்டன் வெளியேற்றினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜடேஜா 5, வாஷிங்டன் 4 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (18), 'ஷாக்' கொடுத்தார். 19 ஓவர் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 86/4ரன் எடுத்திருந்தது.